
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரைபடமும் அட்டவணையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு இறுதிக்கட்ட நடவடிக்கைக்கு முன்னர் அமுல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மின்சார சபையின் மறுசீரமைப்பு முன்னேற்றம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டதாகவும் அமைச்சர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, அமெரிக்கா உதவித் திட்டம் மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ஆகியவற்றிற்கும் அவர்கள் வழங்கக்கூடிய ஆதரவு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதோடு நிதி தணிக்கை, மனித வள தணிக்கை, சொத்து தணிக்கை மற்றும் சட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவை பெற ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.