
வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே திரும்பிச் சென்றமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் பணிபுரிந்த குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரி ஒருவரே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ள போதிலும், அவர் வெளிநாடு செல்ல முடியாது என கணனி அமைப்பில் பதிவாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த சம்பவம் முறைமை பிழையினால் ஏற்பட்டதா அல்லது தரவு உள்ளீட்டில் ஏற்பட்ட பிழையினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.