
பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை அடுத்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு திகதியை நிர்ணயித்துள்ளது.
இதன்படி, பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகு றித்த மனு மீதான விசாரணையை ஜூலை 4ஆம் திகதி தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.