
அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு, மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அதிகாரிகள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன ஆணைக்குழுவிற்கு அனுப்பிய முறைப்பாட்டின் பிரகாரம் அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது .
இதன்படி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுகாதார அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர்கள் ஆணைக்குழுவில் ஆஜராகாததால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.