
மலேசிய அரசாங்கம் சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளது.
மேலும், மலேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சஃபுதீன் பின் ஸ்மைல் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது நேபாளத்திற்கு மாத்திரம் வழங்கப்படும் பாதுகாப்பு சேவைகளுக்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு மலேசிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும், மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுமங்கலா டயஸும் கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்.