
மேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்படும் வருட இறுதித் தவணைக் மதிப்பீட்டுப் பரீட்சையில் நாளை (15) நடைபெறவிருந்த பாடங்களை நடத்த மேல் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.
இதன்படி நாளை நடைபெறவிருந்த 10ம் மற்றும் 11ம் தர பரீட்சைகள் எதிர்வரும் 22ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாளை நடைபெறவிருந்த தரம் 09 மாணவர்களின் பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு மாணவர்கள் நாளை பரீட்சைக்கு வரும்போது ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.