
சிறப்புரிமை மீறல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்களை வெளியிட்டாலும், உண்மையில் அந்த சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிபதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்கு அழைத்து விசாரிக்க அரசாங்கம் தயாரா என இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.