
ரஷ்யா போர் விமானம் மற்றும் அமெரிக்கா ஆளில்லா விமானம் மோதியதில் ஆளில்லா விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்கா பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரண்டு ரஷ்யா ஜெட் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் ஒரு வழக்கமான பணியில் இருந்தபோது அதன் ட்ரோனை இடைமறிக்க முயன்றதாக அமெரிக்கா பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்கா மற்றும் நேச நாட்டுப் படைகள் அப்பகுதியில் தொடர்ந்து செயல்படும் என்று அமெரிக்கா பாதுகாப்புப் படைகள் மேலும் தெரிவித்த்துள்ளதோடு இந்த சம்பவம் குறித்து ரஷ்யா இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றானே.
மேலும், ” MQ-9 ஆளில்லா விமானம் சர்வதேச வான்வெளியில் சாதாரண செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்யா விமானத்துடன் மோதியதில் கடலில் விழுந்து நொறுங்கியது” என அமெரிக்க விமானப்படை ஜெனரல் ஜேம்ஸ் ஹெக்கர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, MQ-9 ரீப்பர் ட்ரோன் என்பது பெரிய அளவிலான ஆளில்லா வான்வழி கண்காணிப்பு வாகனம் என்பதோடு இது அதிக உயரத்தில் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் அமெரிக்க விமானப்படை ஜெனரல் ஜேம்ஸ் ஹெக்கர் மேலும் தெரிவித்துள்ளார்.