
சீனா அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட பொலிஸ் சீருடை துணிகள் ஒரு தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.
மேலும், குறித்த நன்கொடை தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன் அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர்திரான் அலக்ஸிடம் கையளித்தார்.