
-ஹிஸாம் ஏ பாவா-
இலங்கை இதழியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த விளிம்புநிலைப் பெண்களின் யதார்த்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகள் எழுதும் இரண்டு நாள் வதிவிட நடைமுறைப் பயிற்சிப் பட்டறை நிகழ்வானது அண்மையில் தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அபிவிருத்திக்கான உதவி ஊக்க இலங்கை மையத்தின் பணிப்பாளர் திஸ்ஸ விஜேதுங்க கலந்து கொண்டதோடு இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு.M.J.R டேவிட் அவர்கள், பட்டறையின் முக்கிய நோக்கமான விளிம்புநிலைப் பெண்களின் உண்மை வாழ்க்கைக் கதைகளைத் தொகுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கினார்,
அத்தோடு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆங்கில கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சித்ரா ஜயதிலக அவர்கள் நடத்திய விரிவுரையில், பெண்களின் வாழ்க்கை கதை கட்டுரையின் அடிப்படைகள் குறித்து தத்துவார்த்த மற்றும் நடைமுறை விஷயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டதோடு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிங்களம் மற்றும் வெகுசன தொடர்பாடல் கற்கைகள் பிரிவிலிருந்து கலாநிதி ஹன்சமாலா ரிதிகஹபொல இலக்கியப் பெண்களின் வாழ்க்கை வரலாறுகள் குறித்தும் விரிவுரைகளை வழங்கினார்,
மேலும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் ஆலோசனைக் கற்கைகள் பிரிவின் தலைவரான கலாநிதி எச்.எம்.சி. ஜே. ஹேரத், பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் மெய்நிகர் உளவியல் அணுகுமுறைகுறித்தும் விரிவுரையை வழங்கிஇருந்ததோடுஇந்நிகழ்வில் அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (Sri Lanaka Center for Development Facilitation) மற்றும் Community Strength Development Foundation, Federation of Social Social Development Organization மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இதழியல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்கேற்பாளர்கள்,போன்ற தெரிவு செய்யப்பட்ட நபர்களை கொண்டு இந்நிகழ்வுகள் நடாத்தப்பட்டதோடு இந்நிகழ்வில் ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் தமது பங்களிப்பை வழங்கியமை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடையமாகும்.