
நேற்றைய வேலை நிறுத்தம் முற்றிலும் அரசியல் ரீதியானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
மேலும், நேற்றைய பணிப்புறக்கணிப்பு எவ்வித அடிப்படையுமின்றி முன்னெடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நேற்றைய பணிப்புறக்கணிப்பு ஒரு எச்சரிக்கை மாத்திரமே என தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொழில் வல்லுநர்கள் சங்கம் இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மற்றும் ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.