
கருங்கடலில் ரஷ்ய போர் விமானம் மற்றும் அமெரிக்கா MQ-9 ரீப்பர் ட்ரோன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை அமெரிக்கா பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த 14ஆம் திகதி ரஷ்யாவின் எஸ்யூ-27 போர் விமானம் மோதிய பயங்கரமான காட்சி ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.
அத்தோடு. ட்ரோனுக்குப் பின்னால் வந்த ரஷ்ய விமானம் ட்ரோனின் ப்ரொப்பல்லருடன் மோதியது, அதே நேரத்தில் விமானத்திலிருந்து எரிபொருளை வெளியிடுவதும் படம்பிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் மூலம் 32 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆளில்லா விமானம் சர்வதேச கடலில் விழுந்து நொறுங்கிய நிலையில், தற்போது அந்த விமானத்தின் பாகங்களை மீட்க ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே போட்டி தொடங்கியுள்ளது.
மேலும், உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முதல் நேரடி மோதல் இதுவாக்கும்.