
இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான பிரேரணை இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது முன்வைக்கப்படாது எனவும் அவைத்தலைவர் தெரிவித்ததையடுத்து சபையில் காரசாரமான சூழ்நிலை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, அங்கு எதிர்க்கட்சித் தலைவர் .சஜித் பிரேமதாச, அதற்கான பிரேரணையை பேரவையில் சமர்ப்பித்து இன்றே தீர்மானம் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் தீர்மானத்திற்கு எதிராக 113 வாக்குகளைப் பெற்று வர்த்தமானி அறிவித்தலுக்கு ஆதரவாக சந்திம வீரக்கொடி எம்.பி மாத்திரம் வாக்களித்த நிலையில் சட்டக் கல்வி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நிராகரிக்கப்பட்டது.