
தற்போது வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், G.E.O வில் கற்பிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதால் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதகமான நிலை ஏற்படுமாயின் அது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இதுவரை வழங்கப்பட்ட அனைத்து தற்காலிக பணிகளும் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாகவும், அதற்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றக் கடிதம் கிடைத்தவுடன் அதற்கேற்ப செயல்படுமாறும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.