
அமெரிக்க ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா தனது இரண்டு B-52 அணு குண்டுவீச்சு விமானங்களை ரஷ்யா எல்லைக்கு அருகில் பறக்கவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த திங்களன்று இரண்டு B-52 மூலோபாய அணு குண்டுவீச்சு விமானங்கள் ரஷ்யா எல்லையை நோக்கி பறந்து கொண்டிருந்தது பற்றிய தகவல் கிடைத்ததும், ரஷ்யா Su-35 போர் விமானங்களில் ஒன்று அவர்களை நோக்கி செலுத்தப்பட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஜப்பான் கடற்பகுதியில் தனது இரண்டு அணு குண்டுகளை பறக்கவிட்டதாக ரஷ்யா அறிவித்த 07 மணித்தியாலங்களுக்குப் பின்னர் அமெரிக்கா இந்த இரண்டு அணு குண்டுவீச்சு விமானங்களையும் ரஷ்யா எல்லையை நோக்கி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜப்பான் பிரதமர் திடீரென உக்ரைனுக்கு விஜயம் செய்ததையடுத்து, ஜப்பான் கடற்பகுதியில் ரஷ்யா தனது அணுகுண்டுகளை அகற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா பயணமாக வரவுள்ள நிலையில், அமெரிக்கா தனது இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு அணு குண்டுகளை ரஷ்யா எல்லைக்கு அருகே பறக்கவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முதல் நேரடி இராணுவ மோதல் ரஷ்யா ஜெட் இடைமறிக்கப்பட்டதோடு அமெரிக்க ட்ரோன் கருங்கடலில் மோதி சேதமாக்கப் பட்டதோடு ஆரம்பமாகியுள்ளது.