
இந்த வருடம் அமெரிக்கா உதவியின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 48,000 விவசாய குடும்பங்களுக்கு ஒரு விவசாயி குடும்பத்திற்கு 30,000 ரூபா கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்செய்கை மேற்கொள்ளும் 48,000 குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா வீதம் இரண்டு தவணைகளின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
மேலும், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளதோடு விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, கடந்த பருவத்தில் நாட்டு விவசாயிகளுக்கு அரசாங்கம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு விவசாய குடும்பத்திற்கு ஒரு இலட்சத்து ஒன்பதாயிரம் ரூபா மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்த விலையில் யூரியா உரம் வழங்குதல், இலவச எரிபொருள் வழங்குதல், குறைந்தபட்ச விலையில் உரம் வழங்குதல், இயற்கை உரங்கள் வாங்குவதற்கு மானியப் பணம் வழங்குதல் ஆகியவை இவற்றில் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.