
மத்திய இந்தியாவின் குவாலியர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்று (24) காலை 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, மணிப்பூரின் மொய்ராங் பகுதியில் இன்று (24) காலை 08.52 மணியளவில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.