
மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் கைதியை தேடும் நடவடிக்கை காவல்துறை, கடற்படை மற்றும் சிறை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும், காணாமல் போனவர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதி என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பல்லேகலையில் உள்ள திறந்த வெளி சிறை முகாமில் இருந்து குறித்த கைதியுடன் தப்பிச் சென்ற மேலும் இரு கைதிகளை நேற்று சிறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்ததுள்ள நிலையில்
சம்பவம் குறித்து சிறைத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.