
நூருள் ஹுதா உமர்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட இலவச அரிசி வழங்கும் திட்டம் தேசிய ரீதியில் நாளை (26) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நாளை (26) ஞாயிற்றுக்கிழமை இலவச அரிசி வழங்கும் நிகழ்வு தொடர்பில் கலந்துரையாடல் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில இன்று (25) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துயாடலில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜெமீல் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டரை்.
இலவச அரிசி விநியோகம் நாளை சாய்ந்தமருது – 01 ஆம், 05 ஆம் பிரிவு மக்களுக்கு வழங்கி நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஏனைய பிரிவுகளுக்கு தொடராக அரிசி விநியோகம் வழங்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் ஆஷிக் இதன்போது மேலும் தெரிவித்தார்.