
பாணந்துறை குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷிகாவின் நெருங்கிய உநண்பர் அடையாளம் காணப்பட்ட ஒருவர் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாணந்துறை சொலமன் மாவத்தையில் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போதே அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, 31 வயதான பாணந்துறை சுபுன் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், குடு சலிந்துவின் பிரதான துப்பாக்கிச் சூடு வீரர்களில் ஒருவரான பெலியத்தே ரணாவின் முக்கிய கூட்டாளி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
அத்தோடு, மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சாலிந்து மல்ஷிகா என்ற குடு சலிந்து மற்றும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா ஆகியோர் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.