
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் தீர்மானத்திற்கு எதிராக பாரிய தொழில் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தொழிற்சங்கத்தின் தலைவர் அசோக ரங்வாலா, பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் இன்று (25) பிற்பகல் இது தொடர்பான தொழில்சார் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தெரிவித்தார்.
அத்தோடு, தமது தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் மீண்டும் கூடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் திகதிகளில் இணக்கப்பாட்டுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.