
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதில் இணக்கம் காணப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் ஆசியாவின் வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளதோடு அங்கு பேசிய இராஜாங்க அமைச்சர், வெளிப்படைத்தன்மையுடன் சமூக நலனை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணம் கிடைத்த பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 07 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.