
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை அல்ல, அவர்கள் முன்வைத்த பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே இலங்கைக்கு முக்கியமானது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.