
இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுர தர்மரத்ன பத்திரனவின் ஹெட்டிபொல பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டின் தோட்டத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில்பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், கபடி சம்மேளனத் தலைவர் தனது தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குப் பின்னால் கைக்குண்டு இருந்ததாகக் கொடுத்த புகாரின் பேரில், பொலிஸார் உரிய இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, கபடி சம்மேளன தலைவர் பதவிக்கு அவர் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும், எனவே எதிர் கட்சியினரால் இது நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.