
அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்களும் 3 பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் Tennessee, Nashville இல் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 28 வயதுடைய பெண் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் அவர் திருநங்கை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அமெரிக்கா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டபோது துப்பாக்கி தரிக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் இதில் சந்தேக நபர் பொலிஸாரால் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற 129ஆவது பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.