
திரிணாமலை, சம்பூர் பிரதேசத்தில் 135 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், இத்திட்டம் 2 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50 மெகாவாட் சூரிய சக்தி திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு 42.5 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளது.
இதன்படி, முதல் கட்டத்தின் கீழ், சம்பூரிலிருந்து கப்பல்துறை வரையிலான 40 கிலோமீற்றர் நீளம் கொண்ட 220 கிலோவாட் ஒலிபரப்பு பாதை அமைக்கப்படவுள்ளதுடன், 23.6 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் முதல் கட்டத்தை 2024 மற்றும் 2025க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 72 மில்லியன் அமெரிக்கா டொலர் முதலீட்டில் 85 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
மேலும், முதல் கட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக 220 கிலோவாட் திறன் கொண்ட ஒரு மின்கடத்தி கப்பல்துறையிலிருந்து புதிய ஹபரணை வரை 76 கிலோமீட்டர் நீளத்திற்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.