
அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக முன்மொழியப்பட்ட நீதிமன்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முடிவு செய்துள்ளார்.
மேலும், நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பினால் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட பல துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலேயே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இதன்படி, மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட நீதித்துறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தாமதத்திலிருந்து அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சர்வதேச விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, நீதித்துறை சீர்திருத்தங்கள் தாமதமாகும் என பிரதமர் தெரிவித்திருப்பதுடன், நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, முன்மொழியப்பட்ட நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராக இஸ்ரேலில் கடந்த 3 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பொதுமக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்ததால் எதிர்ப்புகள் அதிகரித்தமாய் குறிப்பிடத்தக்கவிடையமாகும்.