டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 80 ரூபாவினால் குறைக்குமாறும், பஸ் கட்டணத்தை விரைவில் திருத்தியமைக்குமாறும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபவாக குறைக்கப்பட்டதோடு இந்த புதிய பஸ் கட்டணம் மார்ச் 30ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் ஏனைய பஸ் கட்டணங்கள் குறைப்பு தொடர்பிலான விரிவான தகவல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.