
சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் நெற்செய்கை மேற்கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
மேலும், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மண் உர விநியோகம் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தெரிவித்தார்.
அத்தோடு, உரங்களை கொள்வனவு செய்வதற்கு வவுச்சர் அல்லது கூப்பன் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளதோடு இதுதவிர இவ்வருடம் முதல் இரண்டு பிரதான பருவங்களுக்கு மேலதிகமாக இடைப்பட்ட பருவத்தில் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.