
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்,ன் டொனால்ட் ட்ரம்ப் மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஆபாசமான திரைப்பட நடிகைக்கு பணம் செலவழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பணம் செலுத்துவது சட்டபூர்வமானது என்றாலும், அதை ஒரு வணிகச் செலவு என்று டிரம்ப் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வணிகப் பதிவுகளை பொய்யாக்குவது நியூயார்க்கில் சட்டவிரோதமானது மேலும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு, குறித்த ஆபாசமான திரைப்பட நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் கொடுத்த தொகை ஒரு லட்சத்து 30,000 அமெரிக்க டாலர்கள். 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்தத் தொகையை அவர் செலுத்தியுள்ளார் ஏன்பதோடு குறித்த ஆண்டில் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் போது, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த நடிகைக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதன்படி, 76 வயதான கோடீஸ்வர தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றம் சாட்டப்படும் முதல் அமெரிக்க அதிபர் ஆவார் எனவும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் டிரம்ப் தரப்பு, இது 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட அபத்தமான குற்றச்சாட்டு என்றும்தெரிவித்துள்ளார்கள்.