
காற்று மாசுபாடு காரணமாக தாய்லாந்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் சுகாதாரத் தரவுகளின்படி, ஆண்டின் முதல் 9 வாரங்களில் மட்டும் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மார்ச் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தாய்லாந்தின் காற்றில் அபாயகரமான துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாகவும் சில நகரங்களில் மலைத்தொடர்கள் தெரியாத அளவுக்கு காற்று மாசுபடுவதாகவும், மரங்களின் இலைகள் சாம்பல் நிறமாக மாறுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நுரையீரல், கண், தோல் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளதோடு தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைகளுக்காக விளைநிலங்களை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.