
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 03 மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சபாநாயகர் தலைமையில் நேற்று மதியம் சட்ட சபை கூடியதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மார்ச் 26ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் மீண்டும் மூலர் மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.