
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்காக ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் இயக்கம் ஸ்தாபிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், பதுளையில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அடுத்த மாதம் 3வது வாரத்தில் கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.