
ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளரும், இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி பாதுகாப்பு நிபுணர் குழுவின் உறுப்பினருமான வைத்தியர் சஞ்சய் பெரேராவின் கருத்துப்படி, கடந்த வருடம் 411 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கடந்த 12 வருடங்களில் இலங்கையில் வீதி விபத்துக்களினால் 35,000 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு கடந்த 30 வருட கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இலங்கை மக்கள் துரிதமாக செயற்பட வேண்டுமென ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளர், இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி பாதுகாப்பு நிபுணர் குழுவின் உறுப்பினர் வைத்தியர் சஞ்சய் பெரேரா மேலும் தெரிவித்துள்ளதோடு இலங்கையில் இயங்கி வரும் சாரதி பயிற்சி பாடசாலைகளில் சாரதிகளுக்கு பயிற்சியளிக்கும் முறை மிகவும் முறையானதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.