
கட்டாய விடுமுறையில் இருக்கும் பெற்றோலிய தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளனர்.
மேலும், குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவும் கலந்துகொண்டார்.
அத்தோடு, இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை மீள இணைத்துக்கொள்வது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
இதேவேளை பெற்றோலிய தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று விஜேராமவில் உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.