
OPEC நாடுகள் தமது எரிபொருள் உற்பத்தியினை எதிர்வருகின்ற மே மாதம் முதல் குறைக்க முடிவு செய்துள்ளன.
இதன்படி, தற்போது சந்தை எரிபொருள் உற்பத்தியில் ஸ்திரத்தன்மை இல்லாமையினை கருத்தில் கொண்டு குறித்த OPEC அமைப்பானது உற்பத்தி நடவடிக்கையை அவசரகால குறைப்பு முடியவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தினமும் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் பீப்பாய்களின் அளவு ஒரு லட்சத்து 44,000 குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
மேலும், குவைத் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 28,000 பீப்பாய்கள் குறைத்துள்ளதாகவும், ஓமான் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 40,000 பீப்பாய்கள் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெயினது விலையானது குறையும் குறையும் நிலை உருவாகியுள்ளதாகவும் , மேலும் விலையானது குறையாமல் இருக்கவும் குறித்த OPEC அமைப்பு நடுகல் கச்சா எண்ணெய் உற்பத்தியினை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் செய்தி வெளியிடபட்டு வருகின்றது.