லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலையினை , நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விலை நிர்ணயத்திற்கு அமைய குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனினுடைய விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.