ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இராணுவ உதவியாளர் விளாடிலன் டாடர்ஸ்கி என்ற நபர் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உணவகத்திற்கு பெண் ஒருவர் கொண்டு வந்த பரிசுப் பொதி வெடித்து சிதறியுள்ளதாகவும் இதில் 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆதரித்த டாடர்ஸ்கியின் ஆன்லைன் வலைப்பதிவு பலரிடையே பிரபலமானது குறித்த வலைப்பதிவை மட்டும் 60,000 டெலிகிராம் பின்தொடர்பவர்கள் பார்வையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்தோடு, குறித்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், சம்பவம் குறித்து ரஷ்யா பாதுகாப்பு படையினர் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.