
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை கல்வி பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், மேல், தெற்கு மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டிற்குள் முகாமைத்துவம் பெற்று இளங்கலைப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு, இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை கல்வி பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.