
விவசாயிகளுக்கு பருவத்துக்கான இலவச மண் உரம் விநியோகம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதன்படி , லங்கா உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் இணைந்து 36,000 மெற்றிக் தொன் உரத்தை அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் விநியோகித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை 38 விவசாயப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உர விநியோகம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.