
தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும்செய்தி தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது, தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைப்பது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் அழைப்புகளை கண்காணிப்பது என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.