
பாடசாலைகள் உள்ளிட்ட கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி தொழில்சார் திறன்களைக் கொண்ட பிள்ளைகளின் தலைமுறையை உருவாக்காவிட்டால் எதிர்காலத்தில் கல்வியமைப்பினால் உருவாகும் பிள்ளைகளின் தலைமுறைக்கு பலன் கிடைக்காது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். .
இதன்படி, STEAM கல்விக் கருத்தின் ஊடாக, பாடசாலைகள் உட்பட இந்நாட்டின் கல்விமுறையில் சமூகமயமாகவுள்ள சிறார்களும் தொழில்சார் கல்வியைப் பெற்று, அதற்கான அடித்தளத்தை அமைப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், இதற்கு இணங்க முடியாதவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அந்த சவால்களை வென்று முன்னேற வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், தற்போது ஒரே தரத்தில் உள்ள சகல பிள்ளைகளும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எதிர்காலத்தில் தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவது கல்வி மாற்றத்தில் இடம்பெறும் எனவும், வெளிநாடுகளில் உள்ள 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் அந்நியச் செலாவணியை அதிகரிக்க இந்தத் திறன் அடிப்படையிலான கல்வி மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.