
QR குறியீட்டை மீறி இயங்கிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இதன்படி, அமைச்சர் தனது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் குறித்த விடையத்தினை பதிவிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கிகளுக்கும் ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் ஜிபிஎஸ் அமைப்பு பொருத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தனியார்களும் இதே முறையை பின்பற்றுவார்கள் என்று டிவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.