
ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த பாதுகாப்பு ஏற்பாடு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும்,தேவைப்பட்டால் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரை அழைக்கவும் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.