
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தினுடைய பழைய மாணவர் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஒன்று அமைப்பினுடைய செயலாளரான பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸினுடைய நெறிப்படுத்தலில் சங்கத்தின் தலைவரான பாடசாலையினுடைய அதிபர் எம்.ஐ.எம்.சைபுடீன் அவர்களுடைய தலைமையில் பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் நேற்று (7) நடைபெற்றது.
இதன்படி, அமைப்பினுடைய செயத்திட்டதின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவரும் இவ்வளையில் PAST PUPILS’ ASSOCIATION னினுடைய உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பழைய மாணவர்களான தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளரும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினுடைய உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.சலீம் மற்றும் சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தினுடைய உரிமையாளராகிய எம்.எஸ்.எம்.முபாறக் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினுடைய கல்முனை அமைப்பாளரான சட்டத்தரணி எம்.எஸ்.எம். ரஸாக் மற்றும் சாய்ந்தமருது முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரியான எம்.எம். இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டத்தோடு மேலும் பாடசாலையை இன்னும் முன்னேயேற்றுவதற்கான பல்வேறு முன்மொழிவுகளை உபவேந்தர் றமீஸ் அவர்களும் முபாறக் போன்றோரால்முன்வைக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தினுடைய அதிபரான எம்.எஸ். நபார் மற்றும் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையினுடைய அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தினுடைய அதிகாரிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.