
சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று மாலை 06.25 மணிக்கு புறப்பட இருந்த விமானம்
இன்று காலை 09.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 10.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
மேலும், குறித்த நேரத்தில் இந்த விமானம் இந்தியாவை அண்மித்ததா கட்டுநாயக்க விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்ததோடு விமானத்தின் தலைமை விமானியின் முன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விமானத்தில் 189 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளதுடன் குறித்த விமானத்தின் பயணிகளும் இன்று பிற்பகல் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து வேறொரு விமானத்தின் மூலம் துபாய் நோக்கி புறப்பட்டுள்ளனர்.