
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கடந்த வாரம் ஊடகங்களில் தெரிவித்தார்.
மேலும், தேர்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.