மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்த விதம் சிக்கலுக்குரியது என பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு பணிப்புரை வழங்கிய அதிகாரிகள் வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவாக சபாநாயகரை தவறாக வழிநடத்தியுள்ளதாக தெரிவித்தார்.