
ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விண்ணப்பங்களை தமது நிறுவனத்தில் சமர்ப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.