
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயம், கல்முனை மிஸ்பாஹ் மகா வித்தியாலய வருடாந்த இப்தார் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஆர். அப்துல் ரஸாக் தலைமையில் பாடசாலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர்,ஏ.ஜிஹான ஆலிப், கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி. நஸ்மியா சனூஸ், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர் குழாமினர், நலன்விரும்பிகள், உலமாக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வாறான நிகழ்வொன்று பாடசாலையில் மிக சிறப்பாக நடைபெற வேண்டுமென்ற ஆரம்ப சிந்தனையிலிருந்து இறுதி் வரை அயராது உழைத்த பிரதி அதிபர்ஐ.எல்.எம். ஜின்னாஹ், தரம் 09 பகுதித் தலைவர் எஸ்.எம் புஹாரி மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவருக்கும் விசேட நன்றிகளை அதிபர் தெரிவித்தார்.